அடேங்கப்பா.. கொரோனாவில் இருந்து தப்பிக்க முதியவர் போட்ட அசத்தலான மாஸ்க்! அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டீங்களா!!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதி தீவிரமாக பரவி வருகிறது. மேலும்

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதி தீவிரமாக பரவி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டு வருகிறது.
மேலும் இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் தவறாமல் தொடர்ந்து மாஸ்க் போடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பலரும் வித்தியாசமான மாஸ்க்குகளை அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் ஒருவர் அணிந்திருந்த வித்தியாசமான மாஸ்க் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அம்முதியவர், வேப்பிலையுடன், துளசியையும் சேர்த்து முகக்கவசமாக அணிந்துள்ளேன். இதற்காக நான் தனியாக கயிற்றால் வேலை செய்துள்ளேன். இவ்வாறு அணிவதால் பல நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா என்பவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.