நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! நடந்தது என்ன? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! நடந்தது என்ன? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னனி நடிகராக இருப்பவர் சிம்பு. இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே கார் ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது சாலையை கடக்க ரோட்டில் தவழ்ந்து சென்ற முதியவர் முனுசாமி என்பவர் மீது கார் மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் போலீசார் கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் விபத்து ஏற்படுத்திய அந்த கார் நடிகர் சிம்புவிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும் காரில் டி. ராஜேந்தர் பயணித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் விபத்திற்கும் டி.ராஜேந்தருக்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.