மாட்டு சாணம் அள்ளிய கைகளில் தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன்! ஓபன்னாக கூறிய சுவாரஷ்யங்கள்.......
தேசிய விருதை வென்ற நித்யா மேனன், மாட்டு சாணம் எடுக்கும் காட்சியுடன் தொடர்புடைய அனுபவத்தை பகிர்ந்து பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை நித்யா மேனன், தற்போது தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும் சினிமா அனுபவங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து பேசும் நிலையில் இருக்கிறார். குறிப்பாக, ஒரு அதிர்ச்சி தரும் அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘180’ படத்தில் இருந்து தொடங்கிய நடிப்பு பயணம்
தமிழில் நடிகர் சித்தார்த் ஜோடியாக நடித்த ‘180’ திரைப்படத்தின் மூலம் நித்யா மேனன் தனது கதாநாயகி பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் திறமைசாலி நடிகை என்ற பெயரைக் கொண்டவர்.
தனுஷுடன் இட்லி கடை, விஜய் சேதுபதியுடன் தலைவன் தலைவி
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் பின்னர், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் நடித்தார். கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் வெற்றிபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மாட்டு சாண அனுபவம் மற்றும் தேசிய விருது
ஒரு பேட்டியில் நித்யா மேனன் கூறியதாவது: “இட்லி கடை படத்தில் முதன்முறையாக என் கைகளால் மாட்டு சாணத்தை எடுத்தேன். இது எனக்கு ஒரு புதுமையான அனுபவம். அதுவும், தேசிய விருதைப் பெறும் நாளுக்கு முந்தைய நாள் இந்த காட்சியை படமாக்கினோம். விருதை ஏற்கும் தருணத்தில் என் நகங்களில் இருந்த மாட்டு சாணம் எனக்கு நினைவாகவே உள்ளது.”
‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனுஷுடன் நடித்த நித்யா மேனன், சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தனது சாதனைகளை மனமுவந்து பகிரும் இந்த நட்சத்திரத்தின் வருங்கால சாதனைகள் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: Video : நடிகர் விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி "திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! இணையத்தில் வைரலாகும் வீடியோ..