×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெயம் ரவி, சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்! வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிம்புவைத் தொடர்ந்து நடிகை நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Advertisement

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை நிதி அகர்வால். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

பூமி படத்தை தொடர்ந்து நிதி அகர்வால் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நிதி அகர்வால் மேலும் மற்றுமொரு புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக  நடிகை அனு இம்மானுவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினையின் காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #nidhi agarwal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story