தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னத்திரை பிரபலத்தின் மீது கொலைமிரட்டல் விடுத்த வெளிநாட்டு வாலிபர் - போலிசாரின் அதிரடி செயல்

Nilani

Nilani Advertisement

சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை நிலானி. இவர் மதுரவாயலில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையாக வசித்து வந்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்த நிலையில் திடீரென இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் நிலானி தான் என தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.

அந்த சர்ச்சைகளுக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த மஞ்சுநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Nilani

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஒரு நாள் நிலானிக்கு மஞ்சுநாதன் ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்துள்ளது. அதனால் நிலானி அவரை விட்டு விளகி சென்றுள்ளார். இதனால் மஞ்சுநாதன் தான் செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு நிலானியை தொந்தரவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவரைத் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் நிலானி காவல் நிலையத்தில் மஞ்சுநாதன் மீது புகார் அளித்துள்ளார்.

அதன் படி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில்சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய மஞ்சுநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nilani #சீரியல் actress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story