×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நடிகை நிக்கி கல்ராணி எடுத்த அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவல்!!

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நடிகை நிக்கி கல்ராணி எடுத்த அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'டார்லிங்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி தமிழ் மட்டுமின்றி கன்னட மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவர் மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்தபோது ஹீரோவாக நடித்த ஆதியுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி- ஆதி இருவருக்கும் அண்மையில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நடிகை நிக்கி கல்ராணி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள வெல்லும் திறமை என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடுவராக நிக்கி கல்ராணியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nikki kalrani #Aadhi #judge
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story