×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிரடியாக குறைந்த சினிமா டிக்கெட் கட்டணம்! ஜனவரி முதல் எங்கெங்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

New reduced ticket rates from January 2019

Advertisement

சினிமா இன்றைய மக்களின் அங்கமாக மாறி விட்டது. பொழுது போக்கிற்கான முக்கிய காரணிகளில் ஓன்று சினிமா. முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளிவந்த படங்கள் இன்று வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. முன்பெல்லாம் டீவியில் மட்டுமே அதிகம் படம் பார்த்து வந்த மக்கள் தற்போது வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் திரையரங்கம், மால் என்று சென்று ரசித்து வருகின்றனர்.

திரைப்படங்கள் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் படத்திற்கான டிக்கெட் விலை பிரமிக்கவைக்கும் வகையில் தாறுமாறாக எறியுள்ளது. குடும்பத்துடன் சென்று படம் பார்க்கவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1500 முதல் 2000 வரை தேவைப்படுகிறது.

இதில் மேலும் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், டிக்கெட் விலையை விட பார்க்கிங், ஸ்னாக்ஸ் போன்றவற்றின் விலை டிக்கெட் விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக சினிமா டிக்கெட்டிற்கான GST வரியில் சற்று மாற்றம் செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அணைத்து விதமான சினிமா டிக்கெட்டும் வரும் ஜனவரி முதல் குறைய உள்ளது.

சாதாரண திரையரங்கம் முதல் மல்டிபிளக்க்ஸ் என்று சொல்ல கூடிய உயர்தரமான திரையரங்கம் வரை அனைத்திற்குமான புதிய விலையை நிர்ணயித்துள்ளது அரசு. அதன் விவரம்.

நகரத்தில் உள்ள திரையரங்குகள்
ரூ 150 டிக்கெட் – ரூ 135 
ரூ 120 டிக்கெட் – ரூ 108 
ரூ 100க்கு குறைவான டிக்கெட் – ரூ 6 குறைவு

மால், மல்டி ப்ளெக்ஸ்  போன்ற தியேட்டர்கள்
ரூ 180 டிக்கெட் – ரூ 165 
ரூ 170 டிக்கெட் – ரூ 158 
ரூ 160 டிக்கெட் – ரூ 130 
ரூ 150 டிக்கெட் – ரூ 120

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#New ticket rates #GST Reduced
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story