×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனகோண்டாவும், அமேசானும்! ஒத்த புகைப்படத்தால் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! கடுப்பில் குஷ்பூ கொடுத்த நறுக் பதிலடி!

netisankal teased kushbu and vishal

Advertisement

 தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். 

நடிகை குஷ்பூ ரஜினி, கமல்,பிரபு,சத்யராஜ் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பிய நிலையில் அவர் ஏராளமான தொடர்களில் நடித்தார்.  மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபலமாக  ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். 

குஷ்புவின் கணவர் நடிகரும், இயக்குனருமான சுந்தர் .சி. அவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆக்சன். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற வில்லை. இருப்பினும் விஷால் சுந்தர்சி மற்றும் குஷ்புவுடன் நண்பர்களாக நெருங்கி பழகி வருகிறார்.

 இந்நிலையில் குஷ்பு, நடிகர் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் அனகோண்டாவும், அமேசானும் என விஷாலையும், குஷ்புவையும் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு கடுப்பான குஷ்பு, உங்க அம்மா என்ன flipkart-ஆ என நச்சென பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்ரீ ரெட்டி விஷாலை அனகோண்டா என கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushboo #vishal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story