×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட இழுபறி பின்னர் விஜய்யின் GOAT படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நீண்ட இழுபறி பின்னர் விஜய்யின் GOAT படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இதுவரை விற்பனையாகாமல் இருந்த GOAT படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக GOAT படக்குழுவினர் சொன்ன விலை, மிக அதிகமாக இருந்ததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இரு தரப்புக்கும் சம்மதம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #venkat prabhu #yuvan shankar raja #netflix
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story