நெருப்பு கூத்தடிக்குது இந்த ஹிட் பாடலை பாடிய பிரபல இயக்குனர் யார் தெரியுமா.?
நெருப்பு கூத்தடிக்குது இந்த ஹிட் பாடலை பாடிய பிரபல இயக்குனர் யார் தெரியுமா.?
கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28, மாநாடு, மங்காத்தா, மாசிலாமணி, பிரியாணி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த 'கஸ்டடி' திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில படங்களில் நடிகராகவும் கலக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
இதுபோன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் 'நெருப்பு கூத்தடிக்குது' என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கொண்டாடப்படும் பாடலாகும்.
இப்பாடலை பாடியவர் வெங்கெட் பிரபு என்று பலருக்கும் தெரிந்திருக்காது. இதனை ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.