தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நெப்போலியனுடன் அமெரிக்காவில் பார்ட்டி பண்ணும் குஷ்பூ, மீனா!" வைரல் புகைப்படங்கள்!

நெப்போலியனுடன் அமெரிக்காவில் பார்ட்டி பண்ணும் குஷ்பூ, மீனா! வைரல் புகைப்படங்கள்!

Nepolian celebrat hia birthday party with Meena and kushboo Advertisement

1991ம் ஆண்டு பாரதிராஜாவின் "புது நெல்லு புது நாத்து" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து ஊர் மரியாதை, இது நம்ம பூமி, தலைவாசல், கேப்டன் மகள், சீவலப்பேரி பாண்டி, புதுப்பட்டி பொன்னுத்தாயி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

meena

90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த நெப்போலியன், ஹீரோவாகவும், வில்லனாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நெப்போலியன் தற்போது பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சாப்ட்வேர் பிசினஸ் செய்துவரும் நெப்போலியன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி தனது 60வது பிறந்தநாளை அமெரிக்காவின் டென்னஸியில், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்துக் கொண்டாடினர் நெப்போலியன்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகைகள் மீனா மற்றும் குஷ்பூ ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் நெப்போலியனுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது  நெப்போலியனின் பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைபபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meena #kushboo #actress #Kollywood #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story