நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகும் பெளடி பெக்கர் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகும் பெளடி பெக்கர் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழில் கோலமாவு கோகிலா, பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்த நெல்சன் திலீப்குமார், சமீபத்தில் பிலியாமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கவின் நடிக்கும் ப்ளடி பேக்கர் (Bloody Beggar) என்ற படத்தை நெல்சன் தயாரித்து வழங்குகிறார்.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலரும் நடிக்கின்றனர். படத்தின் பிற பணிகள் அடுத்தடுத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.