விஜய் டிவி இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல! மன்னிப்பு கேட்ட படவா கோபி! வைரல் வீடியோ...
நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய் விவாதத்தில் பேசிய கருத்துகளுக்காக நடிகர் படவா கோபி சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் எப்போதும் விவாதங்களை கிளப்பும் நீயா நானா நிகழ்ச்சி இந்த முறை தெருநாய்கள் குறித்த விவாதத்தால் கவனம் ஈர்த்துள்ளது. இதில் கலந்து கொண்ட நடிகர் படவா கோபி, சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பின் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெருநாய் விவாதம் சர்ச்சை
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். இதில் படவா கோபி, தெருநாய்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். ஆனால், அவரது சில கூற்றுகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
விளக்கம் மற்றும் மன்னிப்பு
தனது கருத்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறிய படவா கோபி, சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, "நான் மூன்று கருத்துக்களை மட்டுமே பகிர்ந்தேன். யாரும் வெளியே போகக்கூடாது என்று நான் கூறவில்லை. நாய்கள் கடிக்கும் அபாயம் குறித்து மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால், நிகழ்ச்சியில் அது தவறாக காட்டப்பட்டது" என தெரிவித்தார். மேலும், "விஜய் டிவி இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. உண்மையை அறிய Unedited காணொளியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள் தெரியுமா? மேடையில் சித்தப்பா போட்டு உடைத்த உண்மை!
சமூக வலைதளங்களில் எழுந்த இந்த சர்ச்சை, தெருநாய்கள் குறித்த விவாதத்தை மீண்டும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாற்றியுள்ளது. நடிகர் படவா கோபி கூறிய விளக்கம் ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரோபோ சங்கரின் மறுபிறப்பு! நான் செத்துட்டேன்னு என் வீட்டுக்கு மாலையோட வந்தாங்க! அந்த மாலையை அவர்களுக்கே... ரோபோ ஷங்கர் எமோஷனல்!