×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நஸ்ரியா! வெளிவந்த சூப்பர் தகவலால் ரசிகர்கள் செம ஹேப்பி!!

வாவ்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நஸ்ரியா! வெளிவந்த சூப்பர் தகவலால் ரசிகர்கள் செம ஹேப்பி!!

Advertisement

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த நேரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜாராணி  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். பின்னர் நஸ்ரியா நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும், தனது குறும்பான செயலாலும், கியூட்டான சிரிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பின் அவர் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலான அவர் அவ்வப்போது சில மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

 இந்த நிலையில் தற்போது நஸ்ரியா நான் ஈ பட நடிகர் நானியுடன் இணைந்து நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அடடே சுந்தரா! என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் படம் ஜூன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவின் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nazriya #tamil #nani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story