விஜய்யின் குருவி படத்தில் த்ரிஷா இல்லை..! இந்த பிரபல நடிகைதான் நடிக்க இருந்ததாம்..! யார் தெரியுமா.?
Nayanthara was the first choice for kuruvi movie

தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருப்பவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவது தாமதமாகிவருகிறது.
இந்நிலையில், விஜயின் இந்த சினிமா பயணத்தில் பல்வேறு வெற்றிப்படங்கள், சில தோல்வி படங்கள் உள்ளன. அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம் குருவி. ரசிகர்கள் எதிர்ப்பாராத அளவு குருவி படம் வெற்றிபெறவில்லை. விஜய்யின் தோல்விப்படங்களில் குருவி படத்திற்கும் ஒரு இடம் உண்டு என்றே கூறலாம்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்பின்னர் நயன்தாராவை இந்த படத்தில் நாயகியாக நடிக்கவைக்க படக்குழு தீர்மானித்துள்ளது.
ஆனால், இருவரும் ஒருசில காரணங்களால இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின்னர் த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.