×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சா!! நெருக்கமாக நயன்தாரா- விஜய் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதனைத

Advertisement

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி,  தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து கெத்து  காட்டி வரும் நடிகை நயன்தாராவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது  இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தனது கைகளில் இருக்கும் மோதிரம் நன்கு தெரிய, விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா சாய்ந்து இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை எனவும் தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Vignesh Shivan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story