×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துபாயில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை சந்தித்த பிரபல தமிழ்நடிகை! யார்னு பார்த்தீங்களா! வைரல் புகைப்படங்கள்!!

துபாயில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை சந்தித்த பிரபல தமிழ்நடிகை! யார்னு பார்த்தீங்களா! வைரல் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு இருவரும் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

 மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் துபாயில் நடிகை மெஹ்ரின் பிரஸ்தாவை சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை மெஹ்ரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Vignesh Shivan #Dubai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story