×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம்! அதுவும் எப்போ பார்த்தீர்களா! தீயாய் பரவும் தகவல்!

நயன்தாராவுக்கும், அவரது காதலன் விக்னேஷ் சிவனுக்கும் வரும் தை மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

மேலும் அம்மனாக நடித்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த  போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ்சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக உள்ளார். இந்த வருடம் தை மாதத்தில் நயன்தாராவின் திருமணம் நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவர்களின் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதுவும் வெளிவராமலே உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Vignesh Shivan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story