திரைத்துறை தொழிலாளர்களின் நலனுக்காக நயன்தாரா 20 லட்சம் உதவித்தொகை!
Nayanthara help to pepchi membres
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, பல வெற்றி படங்களை கொடுத்து, ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பின் வேண்டுக் கோளை என்று நடிகை நயன்தாரா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக ₹20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.