லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.
Nayanthara family photo

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஐயா படத்தில் நடித்தது மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று வரை முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார்.
மேலும் இவரை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என அழைத்து வருகின்றனர். சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமே அதிக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு ஈடாக நயன்தாராவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் சினிமாவிற்கு வந்து பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தாலும் இவரின் குடும்பத்தை பற்றி எந்த விதமான தகவலும், புகைப்படங்களும் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது நயன்தாராவின் அப்பா, அம்மா புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.