×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம குஷியாக காதலனுடன் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! இதுதான் காரணமா?

nayanthara birthday celebration photo viral

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பரவா நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

நடிகை நயன்தாரா தன்மீது  பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் சற்றும்  பொருட்படுத்தாமல், தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். 
மேலும் அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா நெற்றிக்கண், மற்றும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் அதன் பூஜை பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. மேலும் படத்திற்காக நயன்தாரா விரதம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. 

இந்நிலையில் நயன்தாரா தனது பிறந்தநாளை, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் இணைந்து அசைவ விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக விரதம் இருப்பதாக கூறினீர்களே! அந்த விரதம் இதுதானா என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #birthday #non veg dinner
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story