×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாராவுடன் மோதும் பிரபல நடிகை - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Nayanthara and jothika

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதே தேதியில் நடிகை ஜோதிகா
நடித்துள்ள ஜாக்பாட் படமும் வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சஸி படம்  நல்ல விமர்சனங்களை பெற்றது. ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை கையில் எடுத்துள்ள இவர்களில் யாருடைய படம் அதிக வசூல் ஈட்டப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #jothika
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story