தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலைமோதிய கூட்டம்! ரசிகர்கள் மத்தியில் சிக்கி கொண்ட நயன்தாரா! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்

nayantha-fans-in-hotel-video-viral Advertisement

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவர் கண் பார்வையற்றவராக அசத்தலாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு  குவிந்து நயன்தாராவை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #shooting
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story