காதல் தோல்வி! 12 மாத்திரைகள்! அடுத்தடுத்தாக நண்பன் பட நடிகைக்கு இப்படியொரு பரிதாபமா? ஷாக்கான ரசிகர்கள்!
nanban iliyana stress in love failure

தமிழ்சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். மேலும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இலியானா ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் காதல் தோல்வியால் இலியானா மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் நடிப்பது குறைத்துக்கொண்டு படப்பிடிப்பினை தள்ளி போட்டு கொண்டே இருந்துள்ளார். அதனால் நாளடைவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து அவர் மனஅழுத்தத்திலிருந்து விடுபட மருத்துவமனையில் சிகிச்சை மேலும் அப்பொழுது அவர் ஒரு வேளைக்கு சுமார் 12 மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். அதனால் அவரது எடை கூடியுள்ளது. இதனை இலியானா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.