×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்க்கார்: "கதையை படிக்காமலே இரண்டும் ஒன்று தான் என்று எப்படி சொல்ல முடியும்?" முருகதாஸ் கேள்வி

Murugadass asks question on sarkar decision

Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார். இப்படம் அரசியல் பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு தடை செய்ய கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய 'செங்கோல்' என்ற படத்தின் கதை எனவும் தனது கதையை திருடி முருகதாஸ் படம்  இயக்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார் .மேலும் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வருண்க்கு அளித்த கடிதத்தில் கூறியதாவது,  இரண்டு கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறியதன் பேரில்  செங்கோல் கதையும், சர்க்கார் கதையும் ஒன்று என முடிவு செய்தோம். மேலும்  தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம், முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. 



இந்நிலையில் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் முருகதாஸ் நான் இன்னும் என்னுடைய முழு கதையையும் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. என்னுடைய கதையை படிக்காமல் இரண்டு கதைகளும் ஒன்றுதான் என்று அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murugadass asks question on sarkar decision #Sarkar #murugadass ##WeStandWithARMurugadoss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story