வாவ்..என்னவொரு வாய்ஸ்! ரசிகர்களை மயக்கி, மெய் உருகவைத்த முகேனின் வெளிவராத பாடல்.! இதோ..
mugen singing unleaked song in bigboss

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்னும்இறுதி கட்டத்திற்கு இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கடின உழைப்பால் போராடிக்கொண்டிருக்கும் போட்டியாளர் முகேன் மலேசியாவை சேர்ந்த பாடகர். இவர் ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டிலும் அவர் அவ்வப்போது பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரு புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். அது தான்உருவாக்கி இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பாடல் எனவும் கூறியுள்ளார். இந்த பாடல் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்துவருகிறது.