×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. அட்டகாசம்! வேட்டி சட்டை, முறுக்கு மீசையில் செம மாஸ் காட்டும் முகேன் ராவ்! இணையத்தை தெறிக்கவிடும் போஸ்டர்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற, பிக்பாஸ் ச

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற, பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் முகேன் ராவ். இவர்தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் முகேன் ராவ்விற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.

 மலேசியாவை சேர்ந்த பாடகரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் வரத்துவங்கியது. இந்நிலையில் முகேன் ராவ் இயக்குனர் கவின் இயக்கத்தில் வேலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். அவர்களுடன் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் வேலன் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது வேலன் படத்தில் முகேன் ராவ்வின் கதாபாத்திர போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது. அதில் செம மாடர்னாக இருக்கும் முகேன் ராவ் வேட்டி, சட்டையில் கிராமத்து இளைஞராக மாறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mugen rao #velan #poster
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story