×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

Most Desirable Woman 2018 tamil cinema ishwarya rajesh

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார் நயன்தாரா.

இவர் சந்திக்காத கிசு கிசுக்கள் இல்லை, தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். மேலும் தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துவருகிறார் நயன்தாரா. அதுபோக, தனி ஒரு நடிகையாக இவர் நடிக்கும் படங்களும் மாபெரும் வெற்றிபெறுகிறது. தற்போது ஐரா படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் தோற்றுள்ளார் நயன்தாரா. பிரபல பத்திரிகை ஒன்று சென்ற வருடத்தின் டாப் நடிகைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் "Most Desirable Woman 2018” என்கிற  லிஸ்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார். நயன்தாராவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வடசென்னை' , 'கனா' ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Ishwarya rajesh #Most Desirable Woman 2018
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story