இப்படி வளர்ந்துட்டாங்களே.. முதன்முறையாக தனது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜா!!
mohan raja children photo leaked

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவர் தனது சகோதரர் ஜெயம்ரவியை அப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங், சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் மோகன் ராஜாவிற்கு ஒரு மகன்,ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் சிஎஸ்கே கிரிக்கெட் போட்டிகளை காண தனது மகன் மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் என்னுடைய சிஎஸ்கே நாள். என்னுடைய குழந்தைகளின் சாக்கில் கொண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.