ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று(12-12-2020) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால், தற்போது #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.