நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசியிக்கு போன் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தனது தனித்துவமான ஸ்டைலால், கவர்ந்து அவர்களது மனதில் குடி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று(12-12-2020) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்!" என பதிவிட்டுள்ளார்.