×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ்நாடு வேண்டாம்.. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று மாற்றிக் கொள்ளுங்கள்" சர்ச்சையைக் கிளப்பிய இயக்குனர்!

தமிழ்நாடு வேண்டாம்.. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று மாற்றிக் கொள்ளுங்கள் சர்ச்சையைக் கிளப்பிய இயக்குனர்!

Advertisement

தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியவர்  ரத்னகுமார். இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான குலு குலு ஆகிய திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில்  வசனகர்த்தாவாகவும் பணியாற்றி இருந்தார். மேலும், அந்தத் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் இயக்கிய  விக்ரம் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதியா 67 படமான  லியோ படத்திலும் எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு வெளியான குலு குலு என்ற திரைப்படத்தில்  தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கி இருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். தி ஹிந்து நாளிதழில் தணிக்கை குழு தொடர்பாக வந்துள்ள செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள இவர் இந்த விஷயத்தை நான் குலு குலு படத்திற்காக மட்டும் பேசவில்லை இன்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார். இவரது இயக்கத்தில் சந்தானம் நடித்த குலு குலு திரைப்படத்தில் இந்திய பிரதமர் என்ற  வசனத்தை சென்சார் போர்டு நீக்கி இருந்தது. அதை சுட்டிக்காட்டி பேசியுள்ள ரத்தினகுமார் தணிக்கை குழு இது போன்று தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.



இந்த விஷயம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ள ரத்தினகுமார் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்குவது கலை  அதன் மீது இவ்வாறான சர்வதிகாரப் போக்கு  சரியான ஒரு அணுகுமுறை இல்லை என கூறி இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டை தமிழகம் என்று பெயர் மாற்றுவதை விட  இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என பெயர் மாற்றம் செய்யலாம்  எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். சமீபத்தில் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் பதான் திரைப்படத்திலும் இந்திய பிரதமர் என்ற வசனம்  தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meiyadha maan #director #Rathna kumar #cinema #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story