×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்! வைரலாகும் புகைப்படம்.

Meera jasmin

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி ரசிகர்களின் கனவு கண்ணியாக விளங்கினார்.

அதன் பிறகு புதிய கீதை, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம் போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மீரா ஜாஸ்மின் மிகவும் குண்டான தோற்றத்தில் உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meera jasmin #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story