லவ் டுடே நாயகியின் அடுத்த படம்: பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!
லவ் டுடே நாயகியின் அடுத்த படம்: பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

பாப்பின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மந்த்ரா வீரபாண்டியனின் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில் தயாராகியுள்ள திரைப்படம் மதிமாறன். மதிமாறன் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா, வெங்கட் செங்குட்டுவன், ஆராத்யா, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
கிரைம்-தில்லர் பாணியில் உருவாகியுள்ள மதிமாறன் திரைப்படம், இம்மாதம் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இன்று படத்தின் முதற்பார்வை போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.