×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. வேற லெவல்தான்! சத்தமே இல்லாமல் நடிகர் மாதவன் மகன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!!

அடேங்கப்பா.. வேற லெவல்தான்! சத்தமே இல்லாமல் நடிகர் மாதவன் மகன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மாதவன்.  அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முதலில் சாக்லேட் பாயாக, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் செம பிஸியாக நடித்து வருகிறார். 

இந்தியளவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் மாதவனுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளான்.

தந்தை படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து பிரபலமாக இருப்பது போல, நடிகர் மாதவனின் மகன் ஏராளமான விருதுகளை குவித்து பெருமை சேர்த்து வருகிறார். அதாவது வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர். அவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகளை வென்றுள்ளார். மேலும் அவர் அண்மையில் பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021 நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை பெற்றுள்ளார். இந்த தகவல் தெரியவந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madavan #vedanth #Swimming
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story