"காமெடி ஷோவில் காம நெடி..." இறுதிப் போட்டியாளரிடம் சில்மிஷம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.!! சர்ச்சையில் குக் வித் கோமாளி.!!
காமெடி ஷோவில் காம நெடி... இறுதிப் போட்டியாளரிடம் சில்மிஷம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.!! சர்ச்சையில் குக் வித் கோமாளி.!!
விஜய் டிவியின் மிகவும் பிரசித்தபெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தனது 5-வது சீசனை நடத்திவருகிறது. ஆரம்பத்தில் அனைவராலும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என அழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களாக பெரும் தலைவலியை மக்களுக்கு கொடுத்து வருகிறது. போன சீசனில் மணிமேகலை, பிரியங்கா இடையேயான மோதல், இந்த சீசனில் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் சர்ச்சையால் பெரும் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.
ஆரம்பத்தில் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு காம்போ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தயாரிப்பு குழு பிரச்சனை காரணமாக வெங்கடேஷ் பட் ஷோவிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக இரண்டு சீசன்களாக அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இவரது மொக்க ஜோக்குகள் கடுப்பை கிளப்பினாலும் சீசன் 4-ஐ எப்படியோ நடத்தி முடித்தனர். இந்த சீசன் ஐந்தில், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் விஜய் டிவிக்கு பெரும் சவாலாகவே இருந்தது.
இதற்கிடையே இந்த ஷோவின் முதல் பைனலிஸ்டாக இடம்பெற்ற ஷபானாவிடம், ரங்கராஜ் வரம்பு மீறி நடந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இவருடன் அந்த நிகழ்ச்சியின் கோமாளியான குரேஷியும், ஷபானாவிற்கு எரிச்சலூட்டும் மெசேஜ்களை இரவு நேரத்தில் அனுப்பியுள்ளார் எனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே இந்த வார இறுதி எபிசோடில் ஷபானா தனது வெப் சீரிஸ் ப்ரோமோஷனுக்காக வந்தபோதும் இந்த இருவரையும் அவர் அவாய்ட் செய்ததை பார்க்க முடிந்தது.
இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??
ஷோவில் இருக்கும் பெண்களிடம் அன்பு என்ற பெயரில் கட்டிப்பிடித்து கூத்தடிப்பது, 18 + வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பதும் இந்த ஷோவிற்கான தரத்தை ஏற்கனவே குறைத்து வரும் நிலையில் இப்போது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமண சர்ச்சை மற்றும் ஷபானாவிடம் நடந்து கொண்டத விதம் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. மேலும் ஒழுங்காக காமெடி செய்து வந்த குரேஷி கூடாத நட்பால் தன் பெயரை தானே கெடுத்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் ஷபானா கலந்து கொள்ள தயக்கம் தெரிவிக்கும் நிலையில் விஜய் டிவி அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அடுத்த சீசனில் இந்த இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் ரங்கராஜை நீக்கிவிட்டு வேறொரு நடுவரை நியமிக்கும் பணியில் விஜய் டிவி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: அட.. இவங்கெல்லாமா.! குக் வித் கோமாளியில் களமிறங்கும் பிரபலங்கள்.! யார் யார்னு பார்த்தீங்களா!!