காதல் லீலைகளின் பார்ட் 2 ! மாதம்பட்டி ரங்கராஜின் காதல் வீடியோவை முழுசாக வெளியிட்ட ஜாய் கிரிஸ்ல்டா! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு சமையல் உலகில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி எழுந்த சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
ஜாய் கிரிசில்டா வெளியிட்ட காணொளி
ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா, தனது ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு இணங்க ‘பாகம் 2’ எனும் தலைப்பில் ஒரு புதிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பிரபல சமையல் கலைஞரின் சர்ச்சை
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்ட சமையல் கலைஞர் ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஜாய் கிரிசில்டா, “முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தது குடும்பத்தினருக்கும் தெரியும். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காதல் வார்த்தைகளை பேசி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்! ரகசிய காணொளியை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா....
விமர்சனத்தில் நெட்டிசன்கள்
இந்நிலையில், ரங்கராஜ் தனது நிறுவனத்துக்கு எதிராக ஜாய் அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்திருந்தார். இதனால் இணையத்தில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
வைரலாகும் பாகம் 2 காணொளி
பல ஜென்மம் தாண்டி வந்த உறவாகும் என்று கூறியபடி, ஜாய் கிரிசில்டாவிடம் முட்டி போட்டு காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜின் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோ அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மேலும் சர்ச்சையில் தள்ளியுள்ளது.