×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸான சர்ப்ரைஸ்! மாஸ்டர் படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் செம குஷியில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் குறித்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இதன் டீசர் தீபாவளியன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #telungu teaser #vijay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story