திடீர் பரபரப்பு..! மாஸ்டர் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்..! நடிகர் விஜய்யிடம் விசாரணை..!
Master shooting stopped and enquiry with actor vijay

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார் விஜய். வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். விஜய்க்கு வில்லனாக விஜய சேதுபதி நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்க, சாந்தனு, ஆண்ட்ரியா, VJ ரம்யா போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். டெல்லி, சென்னையை அடுத்து திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற வருமான வரி துறையினர் மாஸ்டர் பட பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததோடு நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன்னதாக இன்று காலையில் இருந்து விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றதை அடுத்து நடிகர் விஜய்யிடமும் தற்போது விசாரணை நடைபெறுகிறது.
இந்த திடீர் விசாரணையால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.