×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த கண்ண பாத்தாக்கா.... 'மாஸ்டர்' படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ.! உச்சகட்ட குஷியில் விஜய் ரசிகர்கள்.!

மாஸ்டர் படத்தின் காதல், ரொமான்டிக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertisement

நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை, மேலும் கூட்டும் விதமாக படக்குழுவினர் தொடர்ந்து புரோமோ வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்க்கு முன்னர் வெளியான புரோமோக்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், விஜய்யின் காதல், ரொமான்டிக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த புரோமோவில், அந்த கண்ண பாத்தாக்கா பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #Promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story