தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை! இயக்குனர் அதிரடி தகவல்!
master movie when will release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்தநிலையில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "மாஸ்டர்" படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை. திரையரங்குகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போதுதான் படம் திரையரங்கில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மாஸ்டர் படத்தை திரையில் பார்த்து கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளன்னர்