வெள்ளை வேஷ்டி.. சட்டை.. அம்சமாக இருக்கும் விஜய்.. மாஸ்டர் படக்குழு கொண்டாடிய பொங்கல்.. வைரல் வீடியோ
மாஸ்டர் படக்குழு கடந்த ஆண்டு பொங்கல் வைத்து கொண்டாடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மாஸ்டர் படக்குழு கடந்த ஆண்டு பொங்கல் வைத்து கொண்டாடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியும் மாஸ்டர் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் அன்று, தமிழகம் முழுவதும் மாஸ்டர் படம் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாஸ்டர் படப்பிடிப்பின்போது, படக்குழு பொங்கல் வைத்து கொண்டாடிய வீடியோ காட்சியினை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், வெள்ளை வேட்டி சட்டையில் டக்கராக இருக்கிறார் விஜய். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.