×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனோவால் தள்ளிப்போன மாஸ்டர் ரிலீஸ்! வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Master movie production poster for vijay fans

Advertisement

 மாநகரம், கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அவர்களை தொடர்ந்து  ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில்  கொரோனா ஊரடங்கு காரணமாக இன்று வெளியாகவில்லை.

 இதுகுறித்து ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு,  உங்களை போல, நாங்களும் உங்களது வரவை மிஸ் செய்கிறோம், சீக்கிரமே கொரோனா வைரஸ்க்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைன்ட் கண்டுபிடிக்கட்டும், விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா என பதிவிட்டுள்ளனர்.  இந்த பதிவால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #Coronovirus #lockdown
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story