×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்போதே பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள விஜய்யின் மாஸ்டர் பட கட்அவுட்..! எங்கே தெரியுமா..?

Master movie banners in famous theaters

Advertisement

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். டெல்லி, கர்நாடகா, சென்னையை தொடர்ந்து திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடக்கிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் புரொமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டது.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளான சத்யம் மற்றும் கமலா திரையரங்குகள் முன் இப்போதில் இருந்தே மாஸ்டர் பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story