×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில காட்சிகளை நீக்கியாத சன் டிவி.? தீயாய் பரவும் தகவல்.!

Master audio launch function vijay talk about CAA

Advertisement

விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே மேடையில் அவர் என்ன பேசப்போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் சற்று அமைதியாகவே இருந்தார். உண்மையா இருக்கணும்னா, சில நேரத்தில ஊமையா இருக்கணும்னு சொல்லிட்டு மேடையில் இருந்து கிளம்பினார் விஜய். வழக்கம்போல் அரசியல் குறித்தோ அல்லது வேறு எந்த சர்ச்சைகள் குறித்தோ விஜய் பேசவில்லை.

இந்த நிகழ்ச்சி முழுவதும் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், விஜய் சிஏஏ குறித்து அவர் ஒரு கருத்தை கூறியதாகவும் அந்த காட்சியை சன்டிவி கட் செய்து விட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது.

மக்களுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்கி விட்டு அதனை மக்களிடம் திணிக்கக் கூடாது என விஜய் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுபோன்ற காட்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. உண்மையில் சிஏஏ குறித்து விஜய் பேசினாரா இல்லையா என்பதை அவரே விளக்கினால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Master audio lunch #vijay #Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story