×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமன்னனுடன் கை கோர்க்கும் கார்த்தி.. வெளியான அசத்தல் தகவல்!

மாமன்னனுடன் கை கோர்க்கும் கார்த்தி.. வெளியான அசத்தல் தகவல்!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கிராமத்து கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன் குமார் சாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தை கார்த்தியை வைத்து தேவ் மற்றும் சர்தார் ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mari selvaraj #Karthi #Prince Pictures #Kaithi 2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story