நடிகை மனோரமாவின் ஒரே மகன் பூபதி காலமானார்! தமிழ் திரையுலகத்தில் பெரும் சோகம்....
தமிழ் சினிமா நடிகை மனோரமா மகன் பூபதி மூச்சுத்திணறல் காரணமாக மரணம் அடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய நடிகை மனோரமா, தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர். ரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழும் அந்த கலைஞரின் குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை மனோரமா மகன் காலமானார்
தமிழ் சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு மறைவுக்கு பின், அவரது ஒரே மகனான பூபதி இன்று காலை 10:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் சில படங்களில் நடித்து இருந்தாலும், பெரும் வெற்றியை பெற முடியாமல் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
திரையுலகத்தில் இரங்கல் அலை
பூபதி நடித்த கதம்பம் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருந்தாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. அவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல நடிகர்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
மனோரமா குடும்பத்துக்கு இது மறுபடியும் ஏற்பட்ட ஆழ்ந்த துயரமான இழப்பு என்பதால், தமிழ் திரையுலகமே இந்த வேதனையை பகிர்ந்து கொண்டு இரங்கலைத் தெரிவித்து வருகின்றது.
இதையும் படிங்க: வில்லனும் நகைச்சுவை நடிகருமான மதன் பாப் இன்று சென்னையில் காலமானார்! தமிழ் திரையுலகில் ஆழ்ந்த சோகம்...