விபத்திற்கு பிறகும் தீபாவளியை கொண்டாடிய நடிகை! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்!
Manjima mohan

தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மஞ்சிமா மோகன். இந்த படத்தில் அவர் நடிப்பை பார்த்து பல இளைஞர்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினர்.
அதனை தொடர்ந்து மஞ்சிமா இப்படை வெல்லும், சத்திரியன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு விபத்து ஏற்ப்பட்டது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளை கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது தனது உடைந்த காலுடன் தீபாவளியை கொண்டாடியது மட்டுமின்றி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.