×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனுக்காக சமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை! கடைசியில இப்படி ஆச்சே! வைரலாகும் வீடியோ.

Manimagalai

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் அப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். 

இவர் நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது அழகிய, சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர். 

மேலும் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இந்த தம்பதியினர் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்கும் மணிமேகலை ஒரு நாள் தனது வீட்டில் சமைப்பதற்கு ஆள் வராததால் தானே தனது கணவருக்கு சமைக்கிறேன் என்று கூறி கடைசியில் வீட்டிலும் கோமாளியாகியுள்ளார் மணிமேகலை. 

அதாவது குக்கரில் சாதம் வைத்து வெகு நேரம் ஆகியும் விசில் வராததால் குக்கர் வெடித்து சமையறை முழுவதும் நாசம் ஆகியுள்ளது. இதனை மணிமேகலையின் கணவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை தற்போது மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Manimagalai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story