மாளவிகா மோகனின் காதலரா இவர்.. ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.!
மாளவிகா மோகனின் காதலரா இவர்.. ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.!
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் முதன்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் இப்படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் மாளவிகா மோகன்.
இந்தப் படத்திற்கு பிறகு தனுஷுடன் 'மாறன்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகன் இவரைத்தான் காதலிக்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.